- முதலமைச்சர் கோப்பை
- திருவள்ளூர்
- திருவள்ளூர்
- மாவட்டம்
- கலெக்டர்
- பிரதாப்
- தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025
திருவள்ளூர், ஆக. 19: முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான இணையதள முன்பதிவுக்கு நாளை கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு கடந்த 14.7.2025 முதல் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை, திருவள்ளூர் மாவட்டத்தில் 57 ஆயிரத்து 107 போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இதுவரை, முன்பதிவு கிடைக்கப்பெற்ற அமோக வரவேற்பினை தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து பிரிவு வீரர், வீராங்கனைகள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில், இணையதள முன்பதிவுக்கான கால அவகாசம் (20ம்தேதி) நாளை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தாங்களாகவோ தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
