- சுதந்திர தினம்
- ரெட்டியார்சத்திரம்
- அரசு
- கல்லூரி
- 79 வது சுதந்திர தினம்
- ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தமிழ்த்துறை
- பெனடிக்ட்
- கல்லூரி அதிபர்
- ப. இ.
- ஜெயபிரதா
ரெட்டியார்சத்திரம், ஆக. 18: ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டின் 79வது சுதந்திர சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழ் துறை மாணவர் பெனடிக் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் (பொ) ஜெயப்பிரதா தலைமை வகித்து தேசியக்கொடியேற்றி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு சுதந்திர தின விழா தலைமையுரையாற்றினார்.
வணிகவியல் துறை சரவணன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவ, மாணகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் சுதந்திர தின விழா பேச்சு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வேதியியல் துறை கவுரவ விரிவுரையாளர் கவுரி நன்றியுரையாற்றினார். தமிழ் துறை மாணவர் முகமது நவாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
