- திருமாவளவன்
- பெரியார்
- அம்பேத்கர்
- Jayankondam
- விடுதலை சிறுத்தைகள் கட்சி
- சிதம்பரம்
- அரியலூர் கிழக்கு
- மாவட்டம்
- கதிர்வளவன்
ஜெயங்கொண்டம், ஆக.18: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான .திருமாவளவன் 63 வது பிறந்த நாளை ஒட்டி அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் கூறு ம்போது:- எழுச்சி தமிழர் திருமாவளவனை வளர்த்த அவரது சின்னம்மாவான செல்லம்மாள் இயற்கை எய்தி உள்ளார். அதனை ஒட்டி அனைத்து நிகழ்ச்சிகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிர்வாகிகளும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மாவ ட்ட அமைப்பாளர்கள் சுமதி சிவகுமார், சின்னராஜா, மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
