- அமைச்சர்
- பெரியாசாமி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- கிராமிய அபிவிருத்தி அமைச்சர்
- மூத்த தலைவர்
- திமுகா ஐ.
- பெரியாசாமி
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவருமான ஐ.பெரியசாமிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜ அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
