- சின்சினாட்டி திறந்த காலிறுதி
- பாவோலினி
- காஃப்மேன்
- வெரோனிகா
- சின்சினாட்டி
- மல்லிகை பவுலினி
- வெரோனிகா குடெர்மெட்டோவா
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பெண்கள்
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பெண்கள்
- அமெரிக்காவின் சின்சினாட்டி…
சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகளில் நேற்று, ஜாஸ்மின் பவோலினி, வெரோனிகா குதர்மெடோவா அபார வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் 2வது நாளாக நேற்று காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினிக்கு (29 வயது, 5வது ரேங்க்) எதிரான காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா வீராங்கனை கோகோ காஃப் (21 வயது, 2வது ரேங்க்) களமிறங்கினார்.
முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக் கணக்கில் பவோலினி இழந்தபோதும், பின் நடந்த இரு செட்களையும் அதிரடி வேகத்துடன், 6-4, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் வென்ற பவோலினி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 3 நிமிடங்கள் நீண்டது. கடைசி காலிறுதி ஆட்டத்தில் பிரான்சின் வர்வரா கிரசேவா (25 வயது, 103வது ரேங்க்), ரஷ்யாவின் வெரோனிகா குதெர்மெடோவா (28 வயது, 4வது ரேங்க்) விளையாடினர். அதில் வெரோனிகா ஒரு மணி 4 நிமிடங்களில் 6-1, 6-2 என நேர் செட்களில் வென்று அயைிறுதியில் விளையாட உள்ளார்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதியில் பெலாரசின் அரீனா சபலென்கா (27 வயது, 1வது ரேங்க்), கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா (26 வயது, 10வது ரேங்க்) மோதினர். எதிர்பார்ப்புக்கு மாறாக ரைபாகினா அற்புதமாக ஆடி 6-1, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி சபலென்காவுக்கு ஏமாற்றத்தை பரிசளித்தார். இன்னொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் (24 வயது, 3வது ரேங்க்), ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயாவை (26 வயது, 34வது ரேங்க்), 6-3, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டங்கள் முடிந்ததை அடுத்து இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் எலனா ரைபாகினா-இகா ஸ்வியாடெக், வெரோனிகா குதெர்மெடோவா-ஜாஸ்மின் பவோலினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
