திங்கள்சந்தை ஆக. 14: ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தை சேர்ந்தவர் பிகாஷ்குமார் (22). செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் இருந்து குமரி மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு அரிசி மற்றும் மளிகை கடை பொருட்கள் விநியோகம் செய்து வந்தார். சம்பவத்தன்று குருந்தன்கோடு பாலம் அருகே அரசு வங்கி முன்பு வைத்து அரிசி மூட்டைகளை கடைகளில் விநியோகம் செய்ய இறக்கினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் பிரகாஷ்குமார் (22) மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரகாஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இரணியல் போலீசார் பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆலன் (21) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
