இலுப்பூர், ஆக.13: இலுப்பூரில் உள்ள இரட்டைபிள்ளையார் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இலுப்பூர் இரட்டை பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்க பட்டு, கடம் ஸ்தாபிதம் செய்து கணபதி ஹோமம் நடைபெற்றது.
இரட்டை பிள்ளையாருக்கு பால், தயிர், தேன், பன்னீர்,இளநீர், மஞ்சள், சந்தனம், நல்லெண்ணெய், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருள்களினால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர், சிறப்பு மலர் அலங்காரத்தில் இரட்டைபிள்ளையார் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு அருள் புரிந்தார். பின்னர், மஹா திபாராதனை நடத்தபட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
