×

வெள்ளிச்சந்தை அருகே பைக் மோதி கண்டக்டர் படுகாயம்

குளச்சல், ஆக.12:கருங்கல் அருகே தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவரது மகன் பிரதீஸ் (33). நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இயங்கும் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பிரதீஸ் பைக்கில் நாகர்கோவில் சென்று கொண்டிருந்தார். வெள்ளிச்சந்தை அருகே சாந்தபுரம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக செருப்பங்கோடு பகுதியை சேர்ந்த னிவாசன் என்பவர் ஓட்டி வந்த பைக் பிரதீஸ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பிரதீஸ் படுகாயம் அடைந்தார். னிவாசன் காயங்கள் இன்றி தப்பினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பிரதீசை மீட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் னிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vellichanthai ,Kulachal ,Balakrishnan ,Thozhikode ,Karungal ,Prathees ,Ranithottam State Transport Corporation ,Nagercoil ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா