- தேர்தல் ஆணையம்
- காங்கிரஸ் எஸ்சி துறை
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ் எஸ்.சி.
- பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்குமார்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ராகுல் காந்தி
- பெங்களூரு மத்திய மக்களவை
சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கை: மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் 1 லட்சத்து 250 வாக்குகள் திருடப்பட்டதாக ஆதாரத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டதும் நாடே அதிர்ச்சியடைந்தது. இதுவரை தேர்தல் ஆணையத்திடமிருந்து பதில் இல்லை. ஆனால், பீகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, ஊடுருவல் காரர்கள் தான் காங்கிரசுக்கு வாக்களிப்பதாக உளறிவிட்டுப் போயிருக்கிறார்.
ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு இதுவா பதில்?. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் அஞ்சாவ் மாவட்டத்தின் கபாபு பகுதி வரை சீன ராணுவம் ஊடுருவி இருப்பதாகச் சொன்னவர் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அந்த ஊடுருவலைத் தடுக்காதது ஏன்?. சமீபத்தில் பகல்காமில் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றார்களே?. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் நீங்கள் தானே?. அங்கு தீவிரவாதிகளை எப்படி ஊடுருவ வீட்டீர்கள்?. ராகுல் காந்தி வெளியிட்ட ஆதாரம், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள ஆவணம் தானே?. ஊடுருவல் காரர்களைத் தடுக்காமல் உள்ளே விட்டது நீங்களே, காங்கிரசின் வாக்கு வங்கி என்று சொல்வது நகைமுரண் அல்லவா? உங்கள் கண்களில் பயம் தெரிகிறது அமித்ஷா.
