×

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை என சட்டம் -ஒழுங்கிற்கு சவாலான குற்றச்செயல்கள் நீடிக்கிறது. உடுமலைப்பேட்டை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது. தமிழக அரசு கொலையாளிகளை கைது செய்வதோடு, அவர்களுக்கு உரிய தண்டனையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும். மேலும் கோவையில் காவல் நிலையத்தில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களுக்கு பாதுகாப்பு இருப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி சட்டம் -ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : G.K. Vasan ,Chennai ,TAMAK ,president ,Tamil Nadu ,Special Assistant Inspector ,Shanmugavel ,Udumalaipettai ,Tamil Nadu government… ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...