- நைனார்
- பாஜக
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- சாத்தூர்
- சாத்தூர் நகர்
- விருதுநகர் மாவட்டம்
- மாநில தலைவர்
- நைனார் நாகேந்திரன்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் சாத்தூர் தொகுதி பாஜ பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு, அங்கிருந்தவர்களிடம், ‘‘உங்கள் பூத்தில் மொத்தம் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்? அதில் ஆண், பெண் எத்தனை நபர்கள் உள்ளனர்’’ என கேட்டார். ஆனால் பெரும்பாலான பூத் பொறுப்பாளர்கள் தகவல் தெரியாமல் திருதிருவென முழித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நயினார் நாகேந்திரன், ‘‘இந்த தகவல்கூட தெரியவில்லையா’’ என கேட்டார். அதற்கு அருகில் இருந்த நிர்வாகி ஒருவர், ‘‘தலைவரே. இவர்கள் அனைவரும் உண்மையான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அல்ல. கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக தனியாக கவனித்து அழைத்து வந்துள்ளோம்’’ என தெரிவித்தார். இதை கேட்டு டென்ஷன் ஆன நயினார் நாகேந்திரன், விரக்தியில் டாபிக்கை மாற்றி பேச தொடங்கினார்.
