- TNPSC
- சென்னை
- அரசுத்தலைவர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மார்க்சிஸ்ட்
- சண்முகம்
- தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையம்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, கடந்த 2024ம் ஆண்டு நவ.27ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவில் 957 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த தேர்வு முடிவை எதிர்த்து சிலர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்ச்சி பெற்ற 957 பேருக்கு பணி ஆணை வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அவர்களுக்கான பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
