- புதுச்சேரி
- சென்னை
- சௌத்ரி முகமது யாசின்
- சுகாதாரம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை புதுச்சேரி துறை
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை செயலரும், மருந்து கட்டுப்பாட்டுத்துறை தலைவருமான சவுத்ரி முகமது யாசின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மொத்த விற்பனையகங்கள் மற்றும் குடோன்கள் என 13 இடங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை உரிமம் பெற்ற 6 இடங்களிலும், உரிமம் இல்லாத 7 இடங்களிலும் போலி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து 15 மருந்து தயாரிப்பு முறைகள் மற்றும் 20 மருந்து மூலப்பொருட்கள் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சென்னை மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு அவற்றின் தரம், பாதுகாப்பு மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு செய்யப்படுகிறது.இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக, சட்டப்படி வழக்கு தொடருதல் உள்ளிட்ட தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
