- கலசலிங்கம்
- பல்கலைக்கழக புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா
- கலசலிங்கம் பல்கலைக்கழகம்
- வேந்தர்
- டாக்டர்
- தாரன்
- துணை வேந்தர்
- அறிவழகி தரன்
- துணை அதிபர்கள்
- சசி ஆனந்த்
- அர்ஜுன் கலசலிங்கம்
- நாராயணன்
- பதிவாளர்
- வாசுதேவன்
- டீன்
- கல்பனா
வில்லிபுத்தூர், ஆக.5: வில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2025-26 முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
இதில் வேந்தர் முனைவர் தரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர் டாக்டர் அறிவழகி தரன், துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் நாராயணன் வரவேற்றார். பதிவாளர் வாசுதேவன், பல்கலை அனைத்து துறை அதிகாரிகளளயும் அறிமுகப்படுத்தி பேசினார். முதலாம் ஆண்டு பொறியியல் துறை டீன் கல்பனா, புத்தாக்கப் பயிற்சிகள் பற்றி விவரித்தார். இதில் பெங்களூரூ மைக்ரோசாப்ட் நிறுவன ஏஎஸ்ஐசி பொறியாளர் சேக் அலிவுர் ரஹமான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பெற்றோர், முதலாண்டு மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் செல்வப்பழம் நன்றி கூறினார். புத்தாக்க பயிற்சி துவக்க விழா குழு பேராசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
