×

அறநிலைத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி

முத்துப்பேட்டை, ஆக.5: ‎ முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி வகுப்பு கிளை தலைவர் யூசுப்கான் தலைமையில் நடைப்பெற்றது. கிளை பொருளாளர் அலாவுத்தீன், கிளை துணை தலைவர் காதர் மைதீன், கிளை துணை செயலாளர் ஜாபர், மாணவரணி ஜுபைர், தொண்டரணி முஜம்மில், மருத்துவ அணி முபீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பேச்சாளர் ராஜ்முகம்மது இஸ்லாம் கூறும் இளைஞர்கள் என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் ராஜுதீன், இளைஞர்கள் செல்ல வேண்டிய பாதை தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக கிளை செயலாளர் முகமது முஸ்தாக் நன்றி கூறினார்.

Tags : Charity Department ,Nachikulam Thowheed Jamaat ,Muthupettai ,the Nachikulam Tamil Nadu Thowheed Jamaat ,near Muthupettai ,President Yusuf ,Treasurer Alauddin ,Vice ,President Kader Maideen ,Deputy ,Secretary Zafar ,Student Rani Zubair ,Muzammil ,Team ,Mubeen ,Rajmuhammad ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு