- எடபாடி பழனிசாமி
- நெல்லா
- ஈப்சி
- எடப்பாடி பழனிசாமி
- பொதுச்செயலர்
- சட்டசபை எதிர்க்கட்சி
- பாஜக
- நைனர் நாகந்திரன்
நெல்லை: இபிஎஸ்க்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நெல்லை சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பியவர்கள், அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேவர் சிலை முன் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது. நெல்லையில் கருப்பு கொடி காட்டியவர்களை அதிமுக ஆதரவு அமைப்பினர் கல் வீசிய தாக்கினர். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.
கண்டன முழக்கங்கள் எழுப்பியவர்களுக்கும் அதிமுக ஆதரவு அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக ஆதரவு அமைப்பையும் கருப்புக் கொடி காட்டியவர்களையும் போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இருதரப்பையும் போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
