கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 4 மாதங்களில் தொடங்கவுள்ளது!

சென்னை: வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. புதிய பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. புதிய ரயில் நிலையத்துக்கான பணிகள் 4 மாதத்தில் தொடங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி செலவில் 3 நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையமாக இது இருக்கும். வெளியூர் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

 

The post கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 4 மாதங்களில் தொடங்கவுள்ளது! appeared first on Dinakaran.

Related Stories: