×
Saravana Stores

புதிய கல்விக்கொள்கையால் மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரிக்கும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: பாரதியாரின் நூற்றாண்டை யொட்டி தமிழக அரசினால் ஆண்டுதோறும் கவிதைப் போட்டி நடத்தி விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டுக்கான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டி மாநில அளவில் நடத்தப்பட்டு மாணவர் பிரிவில் பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மாணவர் முகமது அன்சாரி முதலிடம் பிடித்தார். அதேபோல் மாணவியர் பிரிவில் சேலம், புனித சூசையப்பர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி நிவேதா முதலிடம் பிடித்தார். இவர்களுக்குப் பாரதி இளம் கவிஞர் விருது, தலா ஒரு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை, சான்றிதழை அமைச்சர் பொன்முடி நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல திட்டங்களை நாங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி விட்டோம். ஆனால் அவர்கள் சொல்லுவதில் சில திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட முடியாத ஒன்றாக உள்ளது. 3, 5, மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த சொல்லுகிறார்கள். அது சரியாக வருமா?. 10+2+3 தான் நம் கல்வி முறை. அவர்கள் சொல்வது போல் செய்தால் இடைநிற்றல் அதிகரிக்கும்.பி.ஏ., பி.எஸ்சி சேர்வதற்கு கூட நுழைவு தேர்வு கொண்டு வர வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையில் சொல்கிறார்கள். பி.எட் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 16ம் தேதி அன்று தொடங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post புதிய கல்விக்கொள்கையால் மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரிக்கும்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,Bharathiyar ,Tamil Nadu government ,Bharati Young Poet Poetry Competition ,Palani ,
× RELATED வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய...