×

ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் 12ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வக்ப் வாரிய திருத்தச்சட்டம் எனும் பெயரில் ஆளும் ஒன்றிய பாஜ அரசு இஸ்லாமியர்களின் வழிபாடு மற்றும் தர்மத்திற்கு பயன்படும் சொத்துக்களை பறிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளது, இதற்காக அமைக்கப்பட்ட ஜேபிசியில் உறுப்பினர்கள் கருத்து சொல்ல முடியாத சூழலை உருவாக்கி அரசின் எண்ணத்தை மட்டும் பிரதிபலிக்ககூடியதாக அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. வக்ப் வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 12ம் தேதி(செவ்வாய்கிழமை) மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் சென்னை ராஜாரத்தினம் அரங்கம் அருகே நடைபெற உள்ளது. இதில் மாநிலத்தலைவர் அப்துல் கரீம் கண்டன உரையாற்ற உள்ளார். இதில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் 12ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Dawid ,Jamaat ,Chennai ,Union Government ,Tawheed ,State ,MUJIPUR RAHMAN ,RULING BAJA GOVERNMENT ,WAQB BOARD AMENDMENT ,FRAMEWORK ,ISLAMISTS ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக தமிழ்நாடு,...