×

2024-25ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31க்குள் செலுத்த வேண்டும்: செயலாளர் உமாதேவி அறிவிப்பு

சென்னை: தொழிலாளர் நல வாரியம் செயலாளர் உமாதேவி வெளியிட்ட அறிக்கை: தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு 2024-25ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மேலும் ப்ரிகேஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12000 வரை கல்வி உதவித் தொகை, பாடநூல் வாங்க உதவித் தொகை, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் டிசம்பர் 31ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post 2024-25ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31க்குள் செலுத்த வேண்டும்: செயலாளர் உமாதேவி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Umadevi ,CHENNAI ,Labor Welfare Board ,Dinakaran ,
× RELATED மாலவனுக்கு ஆழி ஈந்த பெருமான்