நியூசிலாந்து பிரதமருடன் ஜனாதிபதி முர்மு சந்திப்பு

வெலிங்டன்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிஜி, நியூசிலாந்து மற்றும் திமோர் – லெஸ்டே நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார். 2ம் நாளான நேற்று நியூசிலாந்து சென்ற முர்முவுக்கு அந்நாட்டு முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதுகுறித்து வௌியுறவு அமைச்சம் எக்ஸ் தள பதிவில், “நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ மற்றும் துணைபிரதமர் வின்ஸ்டன் பீட்டர்சன் ஆகியோரை குடியரசு தலைவர் முர்மு சந்தித்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.

தொடர்ந்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, கல்வி, கலாச்சாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாட்டை தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு வெலிங்டனில் நடந்த நியூசிலாந்து சர்வதேச கல்வி மாநாட்டில் திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது,“கல்வி என் இதயத்துக்கு எப்போதும் நெருக்கமானது. கல்வி ஒரு தனி மனிதனுக்கு மட்டுமின்றி, சமூக மாற்றம், தேசத்தை கட்டியெழுப்பும் கருவி” என்று குறிப்பிட்டார்.

 

The post நியூசிலாந்து பிரதமருடன் ஜனாதிபதி முர்மு சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: