நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் மகள்: ரூ.2.50 லட்சம் படிப்பு செலவை அரசு ஏற்றது

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் மகளின் படிப்பு செலவு ரூ.2.50 லட்சத்தை தமிழக அரசு ஏற்றது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மஞ்சங்காரணி கிராமத்தில் வசிக்கும் தம்பதியர் நந்தகுமார் – உஷா. நந்தகுமார் ஆட்டோ டிரைவர் ஆவார். இவர்களுக்கு தமிழ்விழி, கனிமொழி என இரு மகள்கள் உள்ளனர். இதில் தமிழ்விழி கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 419 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழ்விழி உள்ளிட்ட சக மாணவிகள் 5 பேர் நீட் தேர்வு எழுதினர்.

இதில் தமிழ்விழி வெற்றி பெற்றார். இவருக்கு குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி தமிழ்விழிக்கு படிப்பு செலவான ரூ.2.50 லட்சம் செலவை தமிழக அரசே ஏற்கிறது. தமிழ்விழிக்கு நாளை (7ம் தேதி) கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை நந்தகுமார் கூறும்போது, நான் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைக்கிறேன். நான் வறுமையில் இருந்தாலும் என் மகளை ஆட்டோ விற்று படிக்க வைத்தேன். தற்போது எனது மகள் தமிழ்விழி நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நீட் சிறப்பு வகுப்பு செல்லாமல் வீட்டிலேயே படித்து வெற்றி பெற்றார். மேலும் குமாரபாளையம் பல் மருத்துவமனையில் நடக்கும் கவுன்சிலிங்கில் எனது மகளை சேர்க்க வேண்டும். அவரது படிப்பு செலவை ஏற்ற தமிழக அரசுக்கு எங்கள் நன்றி என்றார்.

The post நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆட்டோ டிரைவர் மகள்: ரூ.2.50 லட்சம் படிப்பு செலவை அரசு ஏற்றது appeared first on Dinakaran.

Related Stories: