நக்சல் உள்ளிட்ட வன்முறை தாக்குதல்கள் 2026ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி

டெல்லி : நக்சல் உள்ளிட்ட வன்முறை தாக்குதல்கள் 2026ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நக்சல் பாதிப்புள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வன்முறைகள் 72% குறைந்துள்ளதாகவும் மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 86% குறைந்து இருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். ந

க்சல்கள் தங்களுடைய இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறிய அவர், பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் தலைமையில் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் உள்நாட்டு தீவிரவாத அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிக்க ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். நக்சல்களின் அச்சுறுத்தலை எதிர்த்து போராட சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

The post நக்சல் உள்ளிட்ட வன்முறை தாக்குதல்கள் 2026ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: