தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது? : ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது? என ஐகோர்ட் கிளை கேள்வியெழுப்பியுள்ளது. தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி, 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், தென் மாவட்டத்தில் மதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் நான்குவழி சாலையாக தேசிய நெடுஞ்சாலை NH 38 அமைந்துள்ளது.

இந்த சாலை தூத்துக்குடி – மதுரை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியில் பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ள நிலையில், வாகைகுளத்தில் உள்ள டோல்கேட்டில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முறையாக இந்த சாலை பராமரிக்கப்படுவதில்லை என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது?.

நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள். உத்தரவை நிறைவேற்ற சொன்னால் ஒரு நாள் மட்டும் 50% கட்டணத்தை நீதிமன்றம் வசூலிக்க சொன்னதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா?. சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை. வாகைகுளம் சுங்கச்சாவடி இயக்குனரின் அறிக்கை மீது திருப்தியில்லை.

வாகைகுளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த சிதம்பரம். பெர்டின் ராயன் ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். சாலைகள் பழுதடைந்துள்ளதால் 50% சுங்கக் கட்டணமே வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேவைப்பட்டால் மனுதாரர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

The post தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கூடாது? : ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: