மியான்மர் சுவாரஸ்யம்: பயணிகள் விமானத்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி..அழகான பெண் குழந்தை பிறந்தது..!!

மியான்மர்: மியான்மரில் வான்வெளியில் பயணிகள் விமானத்தில் கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டதில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. மியான்மர் நாட்டின் தச்சிலிக் நகரிலிருந்து எங்கோனுக்கு உள்ளூர் தனியார் விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அதில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்து கொண்டிருந்தார்.

அவருக்கு திடீரென்று பிரசவவலி ஏற்படவே விமான பணி பெண்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் சகபயணிகள் உதவியுடன் அவர்கள் பிரசவம் பார்த்து அழகிய பெண்குழந்தையை ஈன்றெடுத்தனர். சுமார் 20 நிமிடம் கலைவரத்துக்கு பிறகு மீண்டும் தச்சிலிக் நகருக்கே அந்த விமானம் திருப்பிவிடப்பட்டது. அங்கு தாயும் சேயும் நல்ல உடல்நலத்துடன் தரையிறங்கினர். அங்கு காத்திருந்த மருத்துவ குழுவினர் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

The post மியான்மர் சுவாரஸ்யம்: பயணிகள் விமானத்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி..அழகான பெண் குழந்தை பிறந்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: