மஷ்ரூம் சான்விட்ச்

தேவையானவை:

மஷ்ரூம் – 200 கிராம்
கோதுமை பிரட் – 4
வெங்காயம் – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – சிறிதளவு
கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் – சிறிதளவு
கொத்துமல்லி – சிறிதளவு
வெண்ணெய்- 100 கிராம்.

செய்முறை:

மஷ்ரூம், வெங்காயம், மிளகாய், கொத்துமல்லித் தழைகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை மிக்சியில் லேசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு, அதனுடன் காளான், பச்சை மிளகாய், மசாலாத்தூள் போட்டு வதக்கி, தேவையான உப்பு கொத்துமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். இந்த கலவையை கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும். சுவையான மஷ்ரூம் சான்விட்ச் தயார்.பலன்கள்: காளானில் நார்ச்சத்து, செலீனியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. அடிக்கடி காளானை சாப்பிடும் பட்சத்தில், மூளையின் செயல்பாடு மற்றவர்களை விட கூர்மையாகி விடும்.

The post மஷ்ரூம் சான்விட்ச் appeared first on Dinakaran.