மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 728 புள்ளிகள் உயர்ந்து 66,902 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 728 புள்ளிகள் உயர்ந்து 66,902 புள்ளிகளானது. மும்பை பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்பு முதல்முறையாக 4 லட்சம் கோடி டாலர்களை கடந்துள்ளது. மும்பை பங்குசந்தையில் 30 முன்னணி நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. உலக நாடுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்குச்சந்தை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை 4 டிரில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பை தொட்டு ஐந்தாவது அதிக மதிப்புடைய பங்குச்சந்தையாக உள்ளது.

இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 728 புள்ளிகள் உயர்ந்து 66,902 புள்ளிகளானது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவிப்பதால் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் ஒரு சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. ஆக்சிஸ் வங்கிப் பங்கு 3.9%, எம்&எம் பங்கு 3.3%, விப்ரோ, டாடா மோட்டார்ஸ் பங்குகள் தலா 2%-க்கும் மேல் விலை உயர்ந்தன.

எச்.டி.எஃப்.சி. பங்கு 1.9%, டெக் மகிந்திரா 1.5%, ஐசிஐசிஐ வங்கிப் பங்கு 1.4% விலை உயர்ந்து விற்பனையாயின. JSW ஸ்டீல், எச்.சி.எல். டெக், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், கோட்டக் வங்கி, எல்&டி, பார்த்தி ஏர்டெல் பங்குகளும் விலை உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207 புள்ளிகள் அதிகரித்து 20,097 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 728 புள்ளிகள் உயர்ந்து 66,902 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: