எம்.பி. பதவி தகுதி நீக்க வழக்கு ஓ.பி.எஸ் மகன் பதிலளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது, தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், வெற்றி பெற்றார். முன்னதாக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது வருமானம் உள்ளிட்ட உண்மை விபரங்களை மறைத்ததாக வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தங்க தமிழ்செல்வன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைரவன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய சிவில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.ராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,‘‘இந்த வழக்கு தொடர்பாக ஓ.பி.ரவீந்தரநாத் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

The post எம்.பி. பதவி தகுதி நீக்க வழக்கு ஓ.பி.எஸ் மகன் பதிலளிக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: