பாசிஸ்ட்டுகளை வீழ்த்த, அண்ணாவின் நினைவு நாளான இன்று உறுதியேற்போம்: அமைச்சர் உதயநிதி


சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி தி.மு.க.வினரின் அமைதி பேரணியாக சென்றனர். பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, மா.சுப்ரமணியன், கனிமொழி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டின் தலைமகன், மாநில உரிமைகளின் போர்க்குரல், தமிழர்களை காக்க கழகமெனும் பேராயுதம் தந்த நம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, கழக பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் சக அமைச்சர்கள், கழகப் பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று பங்கேற்றனர்.

மேலும், வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் நம் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்க மாநில சுயாட்சிக்கு ஊறு விளைவிக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்த, அண்ணாவின் நினைவு நாளான இன்று உறுதியேற்போம் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

The post பாசிஸ்ட்டுகளை வீழ்த்த, அண்ணாவின் நினைவு நாளான இன்று உறுதியேற்போம்: அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Related Stories: