ஷாஜகான்பூர்: உபி மாநில முன்னாள் எம்எல்சி அமித் யாதவ். சமாஜ்வாடியை சேர்ந்த இவர் தனது பேஸ்புக்கில் பதிவில், ‘வாக்கு எண்ணிக்கையின் போது மாவட்ட கலெக்டர், இதர மக்கள் பிரதிநிதிகள் நேர்மையின்றி செயல்படுவார்கள். வாக்கு எண்ணிக்கையில் நேர்மையின்றி செயல்பட வேண்டாம், இல்லாவிட்டால் கடும் ரத்த களறி ஏற்படும். நேர்மையின்மைக்கு பெயர் போனவர்கள் அதிகாரிகள் ஆவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் மாநில அமைச்சர், கலெக்டர் ஆகியோரை குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து முன்னாள் எம்எல்சி அமித் யாதவ் மீது தேர்தல் தொடர்பாக பொய்யான அறிக்கை, அரசு ஊழியர் முறையாக பிறப்பித்த உத்தரவை மீறுதல், அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று போலீஸ் அதிகாரி சவும்யா பாண்டே தெரிவித்தார்.
The post அமைச்சர், கலெக்டருக்கு எதிராக கருத்து சமாஜ்வாடி மாஜி எம்எல்சி மீது வழக்கு appeared first on Dinakaran.