அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக முன்னாள் நிர்வாகியான நிர்மல்குமாருக்கு ஐகோர்ட் தடை..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக முன்னாள் நிர்வாகியான சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக பாஜக முன்னாள் நிர்வாகியான சி.டி.ஆர்.நிர்மல்குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாஜக ஐ.டி. பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில், டாஸ்மாக் விற்பனை, மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமைச்சர்கள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூற தடை விதித்து உத்தரவிட்டது. நிர்மல்குமார் அவதூறு கருத்து பதிவிட்டது தொடர்பாக யூடியூப், டிவிட்டர் நிறுவங்கள் பதிலளிக்கவும், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக முன்னாள் நிர்வாகியான சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக முன்னாள் நிர்வாகியான நிர்மல்குமாருக்கு ஐகோர்ட் தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: