மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் பாராட்டு..!!

சென்னை: மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. லாரியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக சட்டத்திருத்தம் கொண்டுவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று நீதிபதி தெரிவித்தார். விதிகளை மீறி மருத்துவ கழிவு கொட்டி சுகாதார சீர்கேட்டை உருவாக்குவோரை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

The post மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் பாராட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: