முறைகேடாக இயங்கிய மருத்துவ கல்லூரிக்கு சீல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் பகுதியில் இயங்கிய தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வுக்கு சென்றனர். இந்த கல்லூரியில் 80 மாணவ, மாணவிகள் படித்து வருவதும், பி.இ.எம்.எஸ். மற்றும் எம்.டி.இ.எச். ஆகிய படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்த படிப்புகளை பயிற்றுவிக்க தமிழ்நாட்டில் அனுமதி இல்லை. அனுமதியின்றியும், முறைகேடாகவும் பயிற்றுவிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதன் உரிமையாளர் தரண்யா மற்றும் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின், முறைகேடாக செயல்பட்ட மருத்துவ கல்லூரிக்கு சீல் வைத்தனர்.

The post முறைகேடாக இயங்கிய மருத்துவ கல்லூரிக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: