×
Saravana Stores

டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதி தேர்வில் மெக்கானிக் மகன் நீதிபதி ஆனார்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில், சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான முடிவுகளை வெளியிட்டிருந்தது, திருவண்ணாமலை மாவட்டம் கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்த k அமித் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஓரிக்கை பனிமனையில் மெக்கானிக்காக பணிசெய்து வருகிறார் இவரது மனைவி H.ஹத்திக்கா இவர்களது குமாரர் அ.பாசில் முகமத்(23) காஞ்சிபுரம் இன்பன்ட் ஜீசஸ் பள்ளியில் + 2 முடித்து பின் சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தில் 2022 இல் சட்டம் பயின்று வழக்கறிங்ஞராக உயர்நீதிமனரறத்தில் பணியாற்றி வந்தார்.

அதேசமயம் தனது கடின உழைப்பால் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மேலும் இவரது தாத்தா கூழமந்தல் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பொழுது ஊருக்காக அரசு பள்ளி கொண்டு வந்தவர் கிராம மக்களுக்காக உழைத்த காலஞ்சென்ற தனது தாத்தா J கறிம் சாஹிப் அவர்களின் கணவை நிறைவேற்றி உள்ளார். கிராமத்தின் முதல் நீதிபதி என்பதால் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதி தேர்வில் மெக்கானிக் மகன் நீதிபதி ஆனார் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Government Staff Selection Commission ,k Amit ,Koolamanthal ,Tiruvannamalai district ,Tamil Nadu Government Transport Corporation ,Orikai Panimana ,H.Hathika ,
× RELATED குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில்...