நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் மல்லிகார்ஜூன கார்கே பிப்.13ல் தமிழகம் வருகை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிப்.13ல் தமிழகம் வருகிறார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிர கள பணியில் இறங்கியுள்ளன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியினருடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்று தெலங்கானா மாநிலத்திலும், 28ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்திலும், 29ம் தேதி ஒடிசாவிலும், 30ம் தேதி பீகாரிலும் பிப்ரவரி 3ம் தேதி முதல் டெல்லி, கேரளம், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியினருடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்துகின்றார்.
அதை தொடர்ந்து பிப்ரவரி 13ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன், அவர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இருக்கின்றார்.

எனவே, அன்றைய தினம் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது கூடுதல் இடங்கள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அவர் கருத்துக்களை முன்வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் மல்லிகார்ஜூன கார்கே பிப்.13ல் தமிழகம் வருகை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: