மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு செய்யலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி நாளை முதல் 20ம் தேதி வரை முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உலக புகழ்பெற்றதாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும், தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குவது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில். ஆண்டின் அனைத்து மாதங்களும் திருவிழா நடந்தாலும் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலம். தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.

மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 21ம் தேதியும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் ஏப்ரல் 23ம் தேதியும் நடைபெற உள்ளது.

கொயேற்றத்துடன் துவங்கி, தீர்த்தம் மற்றும் வேதேந்திர பூஜையுடன் மதுரை சித்திரை திருவிழா நிகழ்வுகள் நிறைவடையும். சித்திரை திருவிழா நடைபெறும் இரண்டு வாரங்களும் மதுரை நகரம் மட்டுமின்றி சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். சித்திரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் காலை மற்றும் மாலையில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வருவார்கள்.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச, நேர்த்திக்கடன் செலுத்த கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது, தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்றும் உயர் அழுத்த மோட்டார் வைத்து தண்ணீர் பீச்சி அடிக்க தடைவிதித்தும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

The post மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு செய்யலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: