சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 12ம் தேதி தொடங்கியது. உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழிலில் வாசித்தார். இதன் பின்னர் 3 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 19ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.ேக.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் பொது, வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசினர். தொடர்ந்து பல்ேவறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

The post சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: