ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் காசி, கயா உள்ளிட்ட நகரங்களுக்கு விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா: பொது மேலாளர் தகவல்

மதுரை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐஆர்சிடிசி) பொதுமேலாளர் ராஜலிங்க பாசு மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:ஐஆர்சிடிசி சார்பில் விமானம் மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் சிறப்பு சுற்றுலாத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, சென்னையில் இருந்து விமானம் மூலம் சுற்றுலாப் பயணிகள் காசி, கயாவுக்கு சிறப்பு யாத்திரை மற்றும் அலகாபாத், அயோத்திக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். 7 நாட்களைக் கொண்ட இந்த சுற்றுலா ஜூலை 4 மற்றும் ஆக.8ம் தேதிகளில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள ஒரு நபருக்கு ரூ.43,500 கட்டணம் வசூலிக்கப்படும்.

காஷ்மீருக்கு சுற்றுலா:

இதேபோல காஷ்மீர் ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்கம், சோக்மார்க், ஹௌஸ்போட் ஆகிய பகுதிகளுக்கு 5 நாள் செல்லும் சுற்றுலா வரும் ஆக.13 மற்றும் செப்.9 தேதிகளில் புறப்படுகிறது. இதில், ஒரு நபருக்கு ரூ.53,500 கட்டணமாக வசூலிக்கப்படும். லே, லடாக், நுப்ரா மற்றும் பாங்காங் 7 நாள் சுற்றுலா ஆக.11 மற்றும் செப்.26 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. இதில், நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.57 ஆயிரம். நேபாளம் காட்மாண்டு, பொக்காராவுக்கு செல்லும் 6 நாள் செல்லும் சுற்றுலா ஆக.14 மற்றும் 24 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது.

இதில், நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.54 ஆயிரம். பூட்டான், காமாக்யாகோவில், பரோ, புனாகா, திம்பு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 8 நாள் சுற்றுலா ஆக.15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. இதில், ஒரு நபருக்கு ரூ.92 ஆயிரம் கட்டணம். இலங்கை கொழும்பு, நுவரெலியா, கண்டி, கதிர்காம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 6 நாள் சுற்றுலா ஆக.24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.64,500 வசூலிக்கப்படுகிறது.

இதேபோல குஜராத், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை, நிஷ்கல்ங், தகாதேவ் கோயில், ஸ்ரீசோம்நாத் ஜோதிர்லிங்க கோயில், போர்பந்தர், துவாரகா, அகமதாபாத் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 9 நாள் சுற்றுலா ஆக.24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. இதில், நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ.41 ஆயிரம் வசூலிக்கப்படும். புவனேஸ்வர், பூரி, கோனார்க், ஒடிசா ஜகன்னாதர் கோயில் மற்றும் சில்கா ஏரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 5 நாள் சுற்றுலா செப்.24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது.

ஒரு நபருக்கு ரூ.43 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும். சுற்றுலா செல்ல விருப்பமுடையோர் ஐஆர்சிடிசி அலுவலகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு பொதுசேவை மையங்களில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு சென்னை – 82879-31968/72, 9003140682/80, மதுரை 82879-32122, 82879-31977, திருச்சி 82879-32070 ஆகிய எண்கள் அல்லது irctctourism.com என்ற இணையதன முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் காசி, கயா உள்ளிட்ட நகரங்களுக்கு விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா: பொது மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: