Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு; மழைப்பொழிவு இருந்தால் பிரச்சனையே இருக்காது :ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி

திருச்சி : நலிவடைந்துள்ள சேலம் உருக்காலைக்கு புத்துயிரூட்டி வேலை வாய்ப்பை பெருகுவது குறித்து ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி ஆய்வு மேற்கொண்டார். தனி விமானம் மூலம் திருச்சி வந்த ஒன்றிய அமைச்சர் குமாரசாமி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் மரியாதை அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் இரு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பேசுகையில், “மழைப்பொழிவு இருந்தால், தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளுக்கு இடையே எந்த பிரச்சனையும் இருக்காது.

மழை பெய்யாத வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது. Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு.காவிரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.நீர்ப் பங்கீடு குறித்து இரு மாநிலமும் சுமூகமாக பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார். மேலும் பேசிய அவர், சேலம் உருக்காலைக்கு புத்துயிர் ஊட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறினார். அதன் மூலம் மீண்டும் அங்கு வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

The post Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு; மழைப்பொழிவு இருந்தால் பிரச்சனையே இருக்காது :ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: