The post கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி appeared first on Dinakaran.
கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி

வள்ளியூர்: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. கடந்த மே 7ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 2 மாதங்களாக அங்கு மின் உற்பத்தி நடைபெறவில்லை. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக இன்று 1000 மெகாவாட் மின் உற்பத்தி எட்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.