கிருஷ்ணகிரியில் 29-வது மாங்கனி கண்காட்சி: பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட பூக்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் மாங்கனி கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவங்கியது. இதில் அண்டைய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் தங்கள் தோட்டங்களில் விளைந்த மாங்கனிகளை காட்சிப்படுத்தி இருந்தன. அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, செந்தூரா, மல்கோவா உள்ளிட்ட மாங்கனிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

தோட்டக்கலைத்துறை சார்பில் பார்வையாளர்களை கவரும் வகையில் ஏலக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்ட 14 வகையான நறுமண பொருட்களை கொண்டு யானை சிற்பம் வடிவமைக்கப்பட்டது. மேலும், பல்வேறு பூக்களை கொண்டு வண்ணத்துப்பூச்சி, ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் போன்று அலங்கரிக்கப்பட்டன. மாங்கனி கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்களும், பொதுமக்களும் அலங்கரிக்கப்பட்ட பூக்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post கிருஷ்ணகிரியில் 29-வது மாங்கனி கண்காட்சி: பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட பூக்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: