கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி புகழஞ்சலி

டெல்லி : மறைந்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான காமராஜர் நினைவு நாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமூக வலைதளப் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதலமைச்சராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களது நினைவுநாள்! காந்தியப் பாதையிலிருந்து கடைசிவரை விலகாத கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதே போல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவரான காமராஜரின் அர்பணிப்பு என்றும் போற்றப்படக் கூடியது.ஒடுக்கப்பட்டவர்களின் மேம்பாட்டிற்கான தொலைநோக்கு பார்வை உள்ளிட்ட கொள்கைகளை ஏற்படுத்தியவர் காமராஜர். காமராஜரின் கொள்கைகள் நாடு முழுவதும் உள்ள தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்,”இவ்வாறு தெரிவித்தார். அதே போல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதிவில்,”எளிமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய, இந்தியாவின் சிறந்த மகன் காமராஜருக்கு அஞ்சலியை செலுத்துகிறோம். தமிழக மக்களால் மதிக்கப்பட்ட அவர், சமூக நீதி, நலனுக்காக வாதிட்டவர்.முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பாரத ரத்னா விருதை பெற்றவருமான காமராஜர், மதிய உணவு திட்டம் போன்ற முன்னோடி திட்டங்களை அறிமுகபடுத்தியதன் மூலம், வசதியில்லாத குழந்தைகளின் இலவசக் கல்விக்கு வழிவகுத்தவர்,”என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி புகழஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: