கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்: கல்லூரி பேராசியர் ஹரி பத்மன் ஜாமின் மனு மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமின் கோரிய மனு மீது காவல்துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார் கடந்த ஏப்ரல் 3ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு முதன்மை நீதிபதி, எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

The post கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்: கல்லூரி பேராசியர் ஹரி பத்மன் ஜாமின் மனு மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: