கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானோருக்கு நவ.25 முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்: தமிழக அரசு தகவல்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானோருக்கு நவ.25 முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000 உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது ஆகும் இந்த திட்டம்.

கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மாதமே 14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு நவ.25ம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். தங்கள் பெயரை சேர்க்க கோரி அக்.25 வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டத்திலுள்ள பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்னதாக ரூ.1,000 செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது. கடைசி நாளான அக்டோபர் 25 வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானோருக்கு நவ.25 முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: