இதற்கிடையே சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் வலுவான பல நிலநடுக்கங்கள் ஏற்படும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.அதன்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1,214 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் மேற்கு கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. இருப்பினும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.பல பகுதிகளில் சாலைகள் பெயர்ந்து உடைந்தன. மின்கம்பங்கள் உடைந்து சரிந்தன. சூப்பர் மார்கெட்களில் பல பொருட்கள் கீழே விழுந்து உடைந்து சிதறின. இதனால் மக்கள் பீதி அடைந்து, கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர்.
The post புத்தாண்டு அன்று 200 பேர் பலியான நிலையில், ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ஒரு வாரத்தில் 1,200 முறை நில அதிர்வுகள்!! appeared first on Dinakaran.