சிறைத்துறையினருக்கு ரூ.10 கோடியில் கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.9.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனத்தில் ரூ.8.39 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை சிறை கட்டிடம், செங்கல்பட்டில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் ரூ.1.6 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், என மொத்தம் ரூ.9.45 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விஸ்வநாதன், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சிறைத்துறையினருக்கு ரூ.10 கோடியில் கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: