கோவை ஈஷா யோக மையத்தில் 8ம் தேதி மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்தன்கர் பங்கேற்பு

கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் 30-ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா வரும் 8ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்தன்கர் கலந்து கொள்கிறார். சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்யதரிசனம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன.

விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துகொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இவ்விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 36 இடங்களில் இவ்விழா நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

The post கோவை ஈஷா யோக மையத்தில் 8ம் தேதி மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்தன்கர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: