×

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

துபாய்: ஈரானின் அதிபர் இப்ராகிம் ரைசி கடந்த ஜூன் 19ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி நடந்தது. இதில் முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசஸ்கியான் 42.5 சதவீத வாக்குகளும், 2ம் இடம் பெற்ற சையது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளும் பெற்றனர். ஆனாலும், ஈரான் அரசியலமைப்பு சட்டப்படி, வெற்றி வேட்பாளர் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும். இதனால், முதல் 2 இடங்கள் பிடித்த பெசஸ்கியான் மற்றும் சையது ஜலீலி இடையே 2ம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், பெசஸ்கியான் 1.63 கோடி வாக்குகளும், ஜலீலி 1.35 கோடி வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம், ஈரான் அதிபராக பெசஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார். அவர் அடுத்த ஒருமாதத்திற்குள் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Pesaskian ,Iran ,presidential election ,Dubai ,President ,Ibrahim Raisi ,finance minister ,Masoud Besaskian ,Besaskian ,election ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம்; கமலா...