பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 25 மீ. பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். தகுதிச்சுற்றில் 590 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு மனு பாக்கர் தகுதி பெற்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் ஏற்கனவே 2 பதக்கங்களை வென்றுள்ளார். 3-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை மனு பாக்கர். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நாளை மதியம் ஒரு மணிக்கு இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.
The post பாரீஸ் ஒலிம்பிக்: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் மனு பாக்கர் appeared first on Dinakaran.