- இந்தியா
- சிந்துரா நடவடிக்கை
- காங்கிரஸ்
- புது தில்லி
- பொதுச்செயலர்
- ஜெய்ராம் ரமேஷ்
- இந்தோனேஷியா
- இந்திய கடற்படை
- சிவகுமார்
- பாக்கிஸ்தான்
- ஆபரேஷன் சிந்துரா...
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “அண்மையில் இந்தோனேஷியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய இந்திய கடற்படை கேப்டன் சிவகுமார், மே 7 2025 அன்று இரவு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய ஆயுதப்படை விமானங்களை இழந்தது என பேசியுள்ளார்.
சிவகுமாரின் கருத்துகளை தன்னிச்சயைான கருத்துகளாக எடுத்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி பிரதமர் மோடி வாய் திறக்க மறுக்கிறார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்கவும் பிரதமர் மோடி மறுக்கிறார். இந்த விவகாரத்தில் மோடி அரசு நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது” என பகிரங்க குற்றம்சாட்டி உள்ளார்.
The post ஆபரேஷன் சிந்தூரில் விமானங்களை இழந்த இந்தியா பாஜ நாட்டை தவறாக வழி நடத்துகிறது: காங்கிரஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.
